/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/253_7.jpg)
இயக்குநர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பது வழக்கம். இக்கூட்டணியில் உருவான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதோடு இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் உள்ளன. இவர்கள் கூட்டணியில் கடைசியாக உருவான ‘மயக்கம் என்ன’. திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில், அதன் பிறகு இக்கூட்டணி எந்தப் படத்திலும் இணையாமல்இருந்தது. இது தொடர்பாக ரசிகர்களும் சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்த நிலையில், தனுஷ் - செல்வராகவன் கூட்டணி ‘நானே வருவேன்’ என்ற படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்திற்கான பணிகளில் இயக்குநர் செல்வராகவன் முழுவீச்சில் ஈடுபட்டுவரும் நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் பெயரில் படக்குழு மாற்றம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)