Selvaraghavan

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடத்திவந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பை பாதியில் கைவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது. பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது முக்கிய காட்சிகளைப் படமாக்கிவருகிறது.

Advertisment

இந்த நிலையில், பீஸ்ட் படக்குழுவினரோடு இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திவந்த செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment