jack sparrow

Advertisment

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் அண்மையில் சானி காகிதம் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். ராக்கி பட இயக்குனர் அருண் மகேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அனுமதி வழங்கப்பட்டவுடன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் முகத்தை ஹாலிவுட் பட ஹீரோக்கள் நடித்திருக்கும் படங்களில் மார்ஃப் செய்து பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு வகை ஆப் மூலம் எளிமையாக உருவாக்கப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்ற மார்ஃப் வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

Advertisment

இந்நிலையில் செல்வராகவனின் முகத்தை பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடித்த ஜேக் ஸ்பேரவ் முகத்துடன் மார்ஃப் செய்த வீடியோவை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்படி மார்ஃப் செய்தது அவரது மனைவி என்று அதில் பதிவிட்டுள்ளார்.