selvaraghavan, dhanush in 'Nane Varuven' - New update release with poster

Advertisment

தனுஷ், வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.