Advertisment

புதுப்பேட்டை 2... உறுதி செய்த செல்வராகவன்!

கடந்த 2008ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டை படம் வெளியானது. இந்த படம் வெளியானபோது வனிக ரீதியாக வெற்றியடையவில்லை. காலங்கள் கடந்துசெல்ல இந்த படத்திற்கான வரவேற்பு இணையவாசிகள் மத்தியில் பெரிதானது.

Advertisment

selvaraghavan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதன்பின் புதுப்பேட்டை 2 எப்போது எப்போது என்று செல்வராகவன் கலந்துக்கொள்ளும் மேடைகளில் மக்கள் கேட்க தொடங்கினர். அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே வெளியாக, செல்வராகவன் அடுத்து தனுஷை வைத்து இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் நேற்று ஒரு கல்லூரி விழாவில் கலந்துக்கொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை 2 படத்தை அடுத்து இயக்கப்போவதாக கூறியுள்ளார்.

அந்த மேடையில் செல்வா பேசுகையில், “அடுத்து என்ன படம் பண்ண போறீங்கன்னு நிறைய பேர் கேட்கிறார்கள். சரி உங்களுக்காக சொல்கிறேன். என்.ஜி.கே-வை தொடர்ந்து நான் பண்ணப்போகும் படத்தில் தனுஷ்தான் ஹீரோ. சரி என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது புதுப்பேட்டை 2 பண்ணிடலாம் என்று உறுதி செய்திருக்கிறோம்” என்றார். இதை கேட்டவுடன் அங்கிருந்த மாணவர்கள் கரகோஷங்களை எழுப்பினார்கள்.

தற்போது இந்த அறிவிப்பால் புதுப்பேட்டை 2 ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

DHANUSH selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe