/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/114_4.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், இயக்குனர் கீதாஞ்சலியை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஓம்கார் என்ற மகனும் லீலாவதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் தற்போது மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இத்தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள கீதாஞ்சலி, குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் குழந்தைக்கு 'ரிஷிகேஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)