'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி 'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' ஆகியபடத்தின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும்வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.ஒரு சாரார் மத்தியில் இப்படங்களுக்குவரவேற்பு கிடைத்தாலும் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைசமீபத்தில்இயக்குநர் மோகன் ஜிவெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படத்தை இயக்குநர்மோகன் ஜி தயாரிக்க உள்ளதாகவும்கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாணிக்காயிதம், பீஸ்ட் படங்களில் நடித்து முடித்துள்ள செல்வராகவன், தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.