Skip to main content

"ஷூட்டிங்ல அவங்க குழந்தை மாதிரி..." - நாயகி குறித்து செல்வராகவன்

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது படக்குழு. நேற்று இரவு 7:30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியான ட்ரைலர் வெளியானது. 
 

selvaraghavan


இந்த நிகழ்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் செல்வராகவன் பேசுகையில்,
 

“என்.ஜி.கே போன்ற சிக்கலான கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு சூர்யாதான் சரியானவராக இருப்பார் என முடிவு செய்து தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன். சூர்யா ஒரு அற்புதமான நடிகர். சின்ன சின்ன பாவனைகளுக்காக கூட மிகவும் மெனக்கெடுவார்.
 

devarattam


நானே ஷாட் ஓக்கே என்று சொல்லிவிட்டால் கூட வேறு வேறு விதமாக செய்து காட்டுவார். ஒரு ஃபேன்பாயாக தான் இந்த படத்தை இயக்கினேன். சாய்பல்லவி ஒரு குழந்தை போன்றவர். ஆனால், சிறந்த நடிகை. அதனால்தான் இந்த படத்தில் அவருக்கும் நடனமாட வாய்ப்பு தராமல் நடிப்புக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல ரஜூல் ப்ரீத் சிங் ஒரு சிறந்த நடிகர். சொல்வதை உடனடியாக புரிந்துகொண்டு நடித்து காட்டுவார்.
 

இது போன்ற ஒரு நல்ல டீமுடன் வேலை செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். வருகின்ற மே 31ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளது. என்.ஜி.கே அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று செல்வராகவன் வழக்கம்போல சிம்பிளாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.