“உங்களுடைய தீவிர ரசிகன் சார்” - செல்வ ராகவன் பிரமிப்பு

selvaraghavan about mammootty

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரமயுகம். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று (15.02.2024) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. இந்த சூழலில் மம்மூட்டி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் இருக்கும் அவரது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இயக்குநர் மற்றும் நடிகரான செல்வராகவன், “உங்களுடைய தீவிர ரசிகன் சார். பிரமிப்பாக உள்ளது” என கமெண்ட் செய்துள்ளார்.

Mammootty selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe