Advertisment

“நெஞ்சம் உடைந்து சிதறியது” - வேதனையில் செல்வராகவன்

selvaraghavan about india lost world cup 2023

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக்கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத்தழுவியது.

Advertisment

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன், “நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகுஅழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம்அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” எனத்தனது வேதனையை அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

cricket ICC World Cup 2023 indian cricket selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe