Skip to main content

“நெஞ்சம் உடைந்து சிதறியது” - வேதனையில் செல்வராகவன்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

selvaraghavan about india lost world cup 2023

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன், “நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம் அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” எனத் தனது வேதனையை அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லாருக்கும் ஒரே கனவு தான்” - அனுபவத்தில் பேசும் செல்வராகவன்

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
selvaraghavan about god by his experience

தமிழில் இயக்குநராக காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது தனுஷின் ராயன் மற்றும் தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.  

இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்து பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமது இதயம்தான் கடவுள் என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உலகத்தில் இருக்கிற ஆண்கள், பெண்கள், கல்யாணம் ஆனவங்க, ஆகாதவங்க எல்லாருக்குமே ஒரு கனவுதான். நமக்குன்னு ஒருவனோ, ஒருத்தியோ வருவாங்க, நம்மள நல்லா புரிஞ்சிக்குவாங்க, நம்மள மடியில வச்சு தாலாட்டுவாங்க, முதல் மரியாதையில சிவாஜி சாருக்கு ராதா கிடைச்ச மாதிரி. நீங்க அவரை தேடி புடிச்சுட்டாக் கூட, கடைசி வரைக்கும் அப்படி ஒருத்தர் கிடைக்கமாட்டாங்க. ஏன்னு யோசிச்சீங்கனா, மண்டைய போட்டு உடைச்சிப்பீங்க. நாம் நினைச்ச மாதிரியே இருக்காங்களே, ஆனா இது நினைச்சவங்க மாதிரியே இல்லையே, அப்படினு ஒரு நாள் விட்டிடுவீங்க. இந்த ஸ்டேட்டஸ் வருவதற்கு முன்னாடியே என்னைக்காவது ஒரு நாள் கண்ணாடியைக் கடந்து போகும் போது பாருங்க. அதுல யார் தெரியுறாங்கனு. புரியுதா அது நீங்க தான். நீங்க தான் உங்களுக்கு அமைதிய கொடுக்க முடியும். உங்கள சந்தோஷமா வச்சிக்க முடியும். 

எல்லா விதமான உறுதுணையாவும் இருக்க முடியும். வேறு யாராலையும் இருக்க முடியாது. நம்மலாம் தேடுறோம். கடவுள் எங்க, கடவுள் எங்கனு. அந்தக் கடவுள் எல்லாருக்கும் தன்னுடைய போர்ஷனா ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறாரு. அது யாருன்னா உங்களுடைய இதயம்தான். நல்லவனா நினைச்சா நல்லது, கெட்டவனா நினைச்சா கெட்டது. என் அனுபவத்துல சொல்றேன், இத விட உங்களுக்கு சிறந்த நணபரோ, கனவு காண்கிற ஒருத்தரோ, யாரும் கிடைக்க மாட்டாங்க. அதனால் தனியா சாப்ட்டு, நடந்து, பழகுங்க. தனியா இயற்கைக்கு புடிச்ச இடம் எதாச்சும் கிடைச்சதுன்னா, அங்க உக்காந்து மணிக்கணக்கா, நீங்களே உங்க இதயத்துக் கூட பேசுங்க. இதயம் திருப்பி பேசும். அதுக்கப்புறம் ஒரு மேஜிக் நடக்கும்” என்றார்.   

Next Story

கலைந்த கனவு - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
 boy who played cricket passed away tragically after being hit by a ball

மகாராஷ்டிர மாநிலம், புனே அடுத்துள்ளது லோஹிகன். இப்பகுதியைச் சேர்ந்தவர் 'ஷம்பு காளிதாஸ் காண்ட்வே' என்ற ஷவுரியா. 11 வயதான இவர், ராமன்பாக் நகரில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, அவருக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சிறுவன் விடுமுறையைக் கழித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 2 ஆம் தேதி சிறுவன் ஷவுரியா லோஹேகான் பகுதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். விடுமுறை என்பதால் கூட்டாக கிரிக்கெட் விளையாடச் சென்றவர்கள், டர்ஃப் விக்கெட் ஒன்றை தேர்ந்தெடுத்து குழுவாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடினர். அப்போது, சிறுவன் ஷவுரியா எதிர்முனையில் நின்ற பேட்டருக்குப் பந்து வீசினார். அந்தப் பந்தை எதிர்கொண்ட பேட்டர் அதை நேராக ஓங்கி அடித்துள்ளார். பந்தானது, பேட்டர் அடித்த வேகத்தில் கண்இமைக்கும் நொடியில் சிறுவன் ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாகத் தாக்கியது. இதனால், சிறுவன் வலியால் துடித்துள்ளார். உடனே, பந்தை அடித்த பேட்டர் ரன் எடுக்க பவுலிங் எண்டுக்கு ஓடிய நேரத்தில் வலியால் துடித்த ஷவுரியா, நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து, ஷவுரியா சுருண்டு விழுந்ததைப் பார்த்து பதறிப்போன சக நண்பர்கள் ஷவுரியாவை எழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவரை எழுப்ப முடியவில்லை. இதனால், செய்வதறியாமல் திகைத்தவர்கள் உடனே அருகில் இந்தப் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து ஷவுரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷவுரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து லோஹிகன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய சிறுவன் திடீரென பந்து தாக்கி உயரிழந்தாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவன் ஷவுரியா பந்து வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது, திடீரென பேட்டர் அடித்த பந்து ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாக தாக்குகிறது.

அடுத்த சில நிமிடங்களிலேயே சிறுவன் சுருண்டு விழுகிறார். பின்னர், அவரை நண்பர்கள் எழுப்ப முயற்சிக்கின்றனர். முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து சிறுவன் ஷவுரியாவை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், நடந்த சம்பவம் விபத்து எனத் தெரியவந்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, விசாரணை  நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சிறுவன் ஷவுரியா உயிரிழப்பு குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கையில், " ஷவுரியா 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆனால், அவருக்கு  விளையாட்டு மீதே அதிக ஆர்வம் இருந்தது. அவர் கனவே மல்யுத்த வீரராக வேண்டும் என்பதுதான். அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிறுவன் ஷவுரியா மரணம் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரின் இழப்பு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது..'' எனக் கூறினர்.

புனே அருகே விளையாடச்சென்ற இடத்தில் 11 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பகுதியில் பந்து தாக்கி சுருண்டு விழுந்து உயரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.