திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இவர் ஆரம்பத்தில் மலையாளத்தில் அறிமுகமானாலும் நடிகர் நாசர் எழுதி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். நடிகர் பாலாசிங் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குணசித்திர, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் புகழ்பெற்றவர். அதேபோல் சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் பாலாசிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலாசிங் மரணம் குறித்து இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பாலாசிங்கின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நெருங்கிய நண்பர். அவருடைய இறப்பு செய்தியை கேட்டு அதிர்ந்தேன். அவரின் அன்புக்குரியவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். என்னுடைய நண்பருக்கு ரெஸ்ட் இன் பீஸ்” என்று தெரிவித்துள்ளார்.