selvaraghavan about ashwin retired

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (வயது 38) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் அஸ்வின். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்களை எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதனிடையே அவர் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களது எக்ஸ்பக்கத்தில், “புத்திசாலித்தனம் மற்றும் புதுமைக்கு பெயர் போனவர் அஸ்வின். இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது சிறப்பான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் செல்வராகவன், அவரது எக்ஸ் பக்கத்தில், “எந்த சூழ்நிலையிலும் அவர் கைவிடமாட்டார். அவர் ஒர் சிங்கம். நம் நாட்டின் பெருமை, சல்யூட் தலைவா” எனக் குறிப்பிட்டுள்ளார்.