selvaraghavan

Advertisment

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல்நலம் சரியில்லாமல் கடந்த ஏப்ரல் 28- ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் இர்ஃபானும், நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் செல்வராகவன், “முதலில் வியக்கத்தக்க இர்ஃபான், தற்போது எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ரிஷி கபூர். நம்முடைய சினிமாவிற்கு இது மிகப்பெரிய இழப்பு, இதை எண்ணி நான் வருத்தத்துடன் மனமுடைந்தேன். உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று இரு கலைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.