selvaragavan review about dhanush raayan

தனுஷ் இயக்கத்தில் பா.பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவது படமாக உருவாகியுள்ள படம் ‘ராயன்’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

தனுஷின் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று (26.07.2024) வெளியாகியுள்ளது. இப்படம் காலை 9 மணி முதல் தமிழகத்தில் சிறப்பு காட்சியுடன் தொடங்கியது. அதை வரவேற்க தனுஷின் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் கொண்டாடினர்.

Advertisment

இதனிடையே இப்படத்திற்கு நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷான் ரோல்டன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு எக்ஸ் தளத்தின் வாயிலாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்த செல்வராகவன், தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்த விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் , “ராயன் படத்தை பார்த்துவிட்டேன், ஈர்க்ககூடிய வகையிலும் மற்றும் பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது. தனுஷ் ஒவ்வொரு காட்சிகளிலும் இயக்குநராகவும், நடிகராகவும் ஜொலிக்கிறார். உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது தம்பி. அனைத்து நடிகர்களின் நடிப்பையும் ரசித்தேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நம்மை வேறு உலகிற்குக் கொண்டு செல்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment