Advertisment

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் செல்வராகவன்

selvaragavan debut as a actor in telugu movie

தமிழில் இயக்குநராக காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப்பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன். இதைத்தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழில் மட்டும் நடிகராகி கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் தற்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். அங்கு முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கும் புது படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக தெலுங்கில் 7ஜி ரெயின்போ காலனி படத்தை 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் ரீமேக் செய்தார். பின்பு நேரடி தெலுங்கு படமாக 'ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே' படத்தை இயக்கினார். இந்தப் படம் தமிழில் யாரடி நீ மோகினிஎன்ற தலைப்பில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

selvaraghavan tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe