Advertisment

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து செல்வராகவன் கருத்து!

enjoy

Advertisment

இளம்பாடகர்கள் தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் கடந்த 7ஆம் தேதி வெளியானது. 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து இயக்குநர் செல்வராகவன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘என்ஜாய் எஞ்சாமி...’ பாடலும் பாடல் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் பிடித்திருந்தது. தீ, அறிவு மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe