Advertisment

"ஐயா.. தலைவா.." - ஏ.ஆர்.ரஹ்மானை சிலாகித்த செல்வராகவன்

selvaragahavan praised ar rahman

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. படத்தின் வெற்றியை ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டிகொண்டாடினர். மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை சந்தித்து வாழ்த்தி நன்றி கூறினார் உதயநிதி. பின்பு கிருத்திகா உதயநிதியுடன் படக்குழு கேக் வெட்டி மகிழ்ந்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்து இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று. நெஞ்சமே நெஞ்சமே... ஐயா, ஏ.ஆர்.ரஹ்மான், தலைவா!. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் குறிப்பாக பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ar rahman maamannan selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe