Advertisment

“விஜய் அவரின் எதிர்காலத்தை சொல்கிறார்” - செல்லூர் ராஜு

sellur raju about vijay

மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று நேரில் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை” என்று குற்றம்சாட்டியவர், “மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது என்றும் மதுரையில் விஜய் நடித்த லியோவிற்கு கூட கூட்டம் குறைஞ்சிடுச்சு; ஆனால் தனியார் ஆஸ்பத்திரியிலும் அரசு ஆஸ்பத்திரியிலும் நோயாளிகள் கூட்டம் அதிகமாகிடுச்சு” என்றார்.

Advertisment

மேலும் லியோ வெற்றி விழாவில் விஜய் அரசியலுக்கு வருவதை சூசகமாக சொன்னதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் ஒரு இளைஞர். அவருடைய எதிர்காலத்தை சொல்கிறார். எத்தனையோ பேர் அரசியலுக்கு வராங்க. ஆட்சியை கைப்பற்றுவதாக சொல்றாங்க. அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது” என்றார்.

Advertisment

actor vijay sellur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe