பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

பிரபல ஹிந்தி பட நடிகையான செஜல் ஷர்மா நேற்று இரவு மும்பையிலுள்ள தனது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sejal sharma

ராஜ்ஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் செஜல் ஷர்மா. இவருக்கு வயது 30 ஆகிறது. பாலிவுட் சினிமாவில் நடிகையாகும் கனவுகளுடன் ராஜஸ்தானிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு மும்பைக்கு வந்து தங்கியுள்ளார். இதன்பின் சிறிது காலம் மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தவர். பின்னர், விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான‘டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி’ என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்த நிலையில், நேற்றிரவு தனது குடியிருப்பில் வைத்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் 2 நண்பர்களும் இருந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செஜலின் தற்கொலை குறிப்பு ஒன்றை பறிமுதல் செய்து உள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காகதான் தற்கொலை செய்துக்கொண்டார் என சொல்லப்படுகிறது.

Actress Bollywood
இதையும் படியுங்கள்
Subscribe