style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'சீதக்காதி'. இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக நடித்துள்ளார். '96' படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார். பேஸன் ஸ்டுடியோஸ் தயாரித்து, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்திரி, மகேந்திரன், அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.