ஜி.வி. பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் புதிய படம்!

hrhrhrehrhe

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகியுள்ள நிலையில், தன் அடுத்தப்பட அறிவிப்பு குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. அதில்..

"வெற்றிகரமாக முடிக்கப்பட்ட 'மாமனிதன்' படத்துக்கு பிறகு 'கலைமகன்' முபாரக்கின் ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் இது. இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது” என அறிவித்துள்ளார்.

seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe