சீனுராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் -யுவன் ஷங்கர்ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின்ட்ரைலர்ரசிகர்களிடம் நல்லவரவேற்பைபெற்றுபடத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர்ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாகயுவன் ஷங்கர்ராஜாஇப்படத்தைத்தயாரித்துள்ளார். இப்படத்தின்ரிலீஸ்தேதியில் பல முறை மாற்றப்பட்டு தற்போது வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் படக்குழுப்ரோமோஷன்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில்சீனுராமசாமி, நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜி.ஆர்ஆகியோரின்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பானட்விட்டர்பதிவில், " மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின்தூண்டாமணிவிளக்குகள்,தமிழ்ச்சினிமாவின்மாமனிதர்கள்முத்தழிழ்அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன் " எனசீனுராமசாமி குறிப்பிட்டுள்ளார்.