Advertisment

சீனுராமசாமியின் அடுத்த படம்; வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்த ஹீரோ

seenuramasamy next with Madhampatty Rangaraj

Advertisment

'கூடல் நகர்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'மாமனிதன்'. விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வேதேச திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் சீனு ராமசாமிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாதம்பட்டி ரங்கராஜ் சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், சீனு ராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

Advertisment

Madhampatty Rangaraj seenu ramasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe