ஜி 5 நிறுவனம் வழங்கும்கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'. இந்த சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ 5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியான இந்த சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரை பார்த்த உதயநிதி நன்றாக இருக்கிறது என்று பாராட்டியதுடன் வெப் தொடரின் சீசன் 2 க்காக காத்திருக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சீனுராமசாமி 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீனுராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உலகத்தின் சிறந்த பாதை இயற்கையை நோக்கி சென்று சேர்தல் என்பதாக நினைவின் பாதைகளில் ஓடி கதைமாந்தர்கள் எனும் நதிகள் கடலில் சங்கமிக்கின்றன. மரணம் விடுதலை எனினும் அது நிகழும் வரை வாழ்வு உன்னதமே என அன்பில் பறக்கிறது 'பேப்பர்ராக்கெட்' இல்லங்களில் வாழும் படைப்பு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.