Advertisment

"உங்களுக்கும் யுவனுக்கும் என்ன பிரச்சனை?" -பதிலளித்த இயக்குனர் சீனுராமசாமி!

seenu ramasamy

Advertisment

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் கரோனா தளர்வுக்குப்பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கும் இப்படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைத்து வரும் நிலையில் இப்படத்தின் இசைப் பணிகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்... ''மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களையும் ரீ-ரிகார்டிங்கையும் (RR) இசைஞானி இளையராஜா முடித்து விட்டார், திரு.யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஒழுங்கு (Arrangement) செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

மேலும் அந்த ட்வீட்டில் "ரசிகர் ஒருவர் உங்களுக்கும் யுவனுக்கும் என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்க,சீனு ராமசாமிபதிலளித்துள்ளார். அதில், எனக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சனையும்இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

seenu ramasamy yuvanshankarraja
இதையும் படியுங்கள்
Subscribe