seenu ramasamy wishes karthi and surya for viruman movie

Advertisment

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில்கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று(3.8.2022) மதுரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான விருமன் ட்ரைலரும்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

alt="seenu ramasamy wishes karthi and surya for viruman movie" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="27e1b5af-797a-4876-b881-342fbd97208d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_11.jpg" />

இந்நிலையில் விருமன் படத்திற்கு இயக்குநர்சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“ஒரு கை எழுத்துக்கு மறு கை நிலத்துக்கு

இளையோன் வயித்துக்கு

மூத்தவர் அறிவுக்கு

இருவரும் தமிழர்

வாழ்விற்கு..

விருமனுக்கும்

விருதுகளுக்கும்

வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment