முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"நாத்திகம் பேசும் படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்...
படங்களுக்கு தலைப்பு சூட்டுவதில்
எனக்கு அவரே ஆசான்.
அன்பு பிறந்த நாள்
வாழ்த்துகள் அய்யா" என பதிவிட்டுள்ளார்.