Seenu Ramasamy

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. ‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளஇப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்துஇசையமைத்துள்ளனர். இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இப்படம் முடங்கியுள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவந்த நிலையில், ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே" என்றார். பிரபுதேவா கண்கலங்கினார். ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார். ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. மிக அருகில் நல்ல சேதி" எனக் குறிப்பிட்டுள்ளார்.