vjs new

பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்குகள் நீண்டுகொண்டே இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்து பதிவிட்டுள்ளார். அதில், “விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். அவர் நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரரும் கேளீர்’ திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து,உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று தெரிவித்துள்ளார்.