இயக்குநர் சீனுராமசாமிகடைசியாக விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மாமனிதன்' படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களின் வரவேற்பைப்பெற்ற இப்படம் பல சர்வேதேசதிரைப்பட விருதுகளையும் வாங்கியது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாதம்பட்டி ரங்கராஜை வைத்து இயக்கவுள்ளார். இப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ளது.
இந்நிலையில் சீனுராமசாமி 'சினிமா ரசனை கல்வி' திட்டத்தினை செயலாற்றியது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு அரசு பாடநூல் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா ரசனை கல்வி’வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா.நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா சினிமா ரசனைக் கல்வியைத்தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது.
நல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாகப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான சென்னை, விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மாதந்தோறும் ஒளிபரப்பப்படுகிறது. சினிமா வாயிலாகக் குழந்தைகளைஆளுமைத் திறன் மிக்கவர்களாகத்திகழ வைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் என என் விருப்பத்தைத்தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர்@mkstalin அவர்களின்
வழிகாட்டுதலில்
சினிமா ரசனைக் கல்வி திட்டத்தினை செயலாக்கிய
மாண்புமிகு கல்வி அமைச்சர்@AnbilMahesh4TMT
தமிழ்நாடு அரசு பாடநூல் தலைவர்
மூத்தவர்@dindigulleoni#CEOMarse
ஆகியோருக்கு அன்பும் நன்றியும்
@jkavinmalar@onlynikil@Riyaz_Ctcpic.twitter.com/bxk7rQq3yo
— Seenu Ramasamy (@seenuramasamy) November 14, 2022