
சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தில் சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அருளானந்து தயாரித்த இப்படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
இதையடுத்து இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சீனு ராமசாமி இப்படத்தை பார்க்க சொல்லி ரஜினியிடம் கூறியிருக்கிறார். உடனே ரஜினியிடம் இருந்து “வாழ்த்துக்கள்” என பதில் வந்துள்ளது. இதனை சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் தெரிவித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
மேலும் “தன்னை தொடர்பு கொள்பவர்கள் சிறியவர்களாகினும் அவர்களுக்கு உரிய மரியாதை தந்து பதில் செய்தி அனுப்பும் அவரது உயர்ந்த உள்ளத்தை வாழ்த்துகிறேன். இது எனக்கு இந்நாளின் ஆசி” எனக் குறிப்பிட்டு ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அன்பான வணக்கம்,
எங்கள் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அமேசான் பிரைமில் @PrimeVideoIN
மக்களின் அன்பை கவனத்தை பெற்று வருவதை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு செய்தி ஒன்று அனுப்பி இருந்தேன்.
😊congratulations 👍👍
என்று பதில் செய்தி அனுப்பியிருந்தார்.… pic.twitter.com/8MzbDaqlbC— Seenu Ramasamy (@seenuramasamy) November 18, 2024