seenu ramasamy request cm

Advertisment

இயக்குநர் சீனு ராமசாமி கடைசியாக 'மாமனிதன்' படத்தை இயக்கியிருந்த நிலையில் இப்படத்திற்காக பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கினார். இதையடுத்து 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகக்கூறப்படுகிறது. இதனிடையே விஷ்ணு விஷால் நடித்த 'நீர்ப் பறவை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனத்தெரிவித்திருந்தார்.

சினிமாவைத்தாண்டி அவ்வப்போது சமூக கருத்துக்களைப் பதிவிட்டு வரும் சீனு ராமசாமி தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும். அவற்றை பொது ஒலிபெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடை விதிக்க வேண்டும் எனப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம்மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை + தடை விதித்தல் செய்திட முதல்வரிடம் வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.