seenu ramasamy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

'தர்மதுரை' படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி தற்போது 'கண்ணே கலைமானே' படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், தமன்னா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரைப் பின்னணியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காகவும், வெற்றி பெறவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செய்துள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் சென்று முடிகாணிக்கை செய்து மொட்டை அடித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">