Advertisment

''பார்த்திபனார் மீது எனக்கு முதல்முறையாக கோபம்'' - சீனு ராமசாமி 

bhfx

Advertisment

ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (நேற்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''இயல்பான நடிப்பில் உறுதியாக, நெகிழ்ந்து

நிலைத்தப் பார்வையுமாக சகோதரி ஜோதிகா

பார்த்திபனார் மீது எனக்கு

முதல்முறையாக கோபம், இயக்குநருக்கு பாராட்டு.

தயாரிப்பாளர் சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்பிற்குச் சான்று

இப்படமும்

இடைவெளியின்றிப் பார்த்தேன்''

எனப் பதிவிட்டுள்ளார்.

ponmagal vanthaal seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe