Advertisment

மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் சீனு ராமசாமி

seenu ramasamy in Moscow International Film Festival

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.

Advertisment

அந்த வகையில், ரஷ்யாவின்புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேசத்திரைப்பட விழாவில், மாமனிதன் படம் திரையிடத் தேர்வானது. இதற்காக ரஷ்யன் மையம் சார்பில்சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் படக்குழுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் ரஷ்யாவில் நேற்று (20.04.2023) மாஸ்கோ சர்வதேசத்திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 27 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் 23 ஆம் தேதி மாமனிதன் படம் திரையிடப்படவுள்ளது. இதற்காக ரஷ்யா சென்ற சீனு ராமசாமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

moscow maamanithan seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe