"உங்களிடம் விண்ணப்பதை முன் வைக்கிறேன்" - சீனு ராமசாமி 

hyuet

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் சீனு ராமசாமி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"தந்தைக்கும் அவர் முதல்வராக உழைத்த தனயனுக்கும் நல்வாழ்த்துகள். இப்பேரிடர் காலத்தை மக்கள் விழிப்புணர்வோடு கடக்க தடுப்பூசியின் மூலம் இந்நோய் காலத்தை முறியடிக்க புதிய அமைச்சரவை வழிவகுக்கும் என்ற விண்ணப்பதை முன் வைக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe