சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 'ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். ரிலீஸ் தேதி பல முறை மாற்றம் செய்யப்பட்டு இறுதியாகக் கடந்த வெள்ளிக்கிழமை (24.6.2022) வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி நக்கீரன் ஆசிரியரை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சீனு ராமசாமி, "தான் எழுதிய புத்தகங்கள் வழங்கி தன் மனப்பூர்வமான வாழ்த்துகளை தந்த தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், மாவீரன் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனதன்பும் நன்றியும்" குறிப்பிட்டுள்ளார்.
தான் எழுதிய
புத்தகங்கள் வழங்கி தன்
மனப்பூர்வமான வாழ்த்துகளை தந்த தமிழகத்தின் மூத்தப் பத்திரிகையாளர்,
மாவீரன் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனதன்பும் நன்றியும்.#Maamanithan on cinemas.@nakkheeranwebhttps://t.co/sP2Cvq6lv2pic.twitter.com/fRwGva0sLP
— R.Seenu Ramasamy (@seenuramasamy) June 30, 2022