Advertisment

ஜி.வி.பிரகாஷிற்கு அசத்தலான பட்டம் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி!

gv prakash

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இடிமுழக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தின் தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுசெய்துள்ளது. இடி முழக்கம் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்த நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஜி.வி.பிரகாஷின் அந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள சீனு ராமசாமி, "ஆணவம் இல்லாத அறிவு, தாய்மொழிப் பற்று, தன்னை ஒப்புவித்து, ஒத்துழைத்த கலை எளிமை, இசையோடு கூடிய தமிழறிவு, என் கலை மீதான அன்பு, இவையெல்லாம் உங்கள் பக்கம் என்னை ஈர்த்தது. "வெற்றித்தமிழன்" என்றே உங்களை அழைக்க விழைகிறேன். துணை வரட்டும் என் தாய் மீனாட்சி. வாழ்த்துகள் தம்பி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி வழங்கியிருந்த நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷிற்கு வெற்றித்தமிழன் என்ற பட்டத்தை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

GV prakash seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe