seenu ramasamy got award for maamanithan in chennai world film festival

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூனில் வெளியான படம் ‘மாமனிதன்’. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்க குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருந்தனர். இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதும் வென்று குவிக்கிறது.

அந்த வகையில் இந்தப் படம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 56வது வேர்ல்ட் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியிருந்தது. ஸ்பெஷல் ஜூரி ரெமி விருது வென்றது. இந்த நிலையில் சென்னை உலக சினிமா விழாவில் இப்படம் விருது வென்றுள்ளது. அதில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பிரிவில் சீனு ராமசாமிக்கு விருது வழங்கப்பட்டது.