Advertisment

‘காட் மேரிட்’ பதிவுக்கு விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி...

seenu ramasamy

'கூடல் நகர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படம் மூன்று வருடங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால், ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்றுவரை வெளியிட முடியவில்லை.

Advertisment

தற்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'மாமனிதன்'. முழுப் படமும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனிடையே தனது அடுத்த படத்திற்கான டிஸ்கஷனில் இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 'காட் மேரிட்' (Got Married) என்கிற பதிவு போடபட்டிருந்தது.

Advertisment

இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என்று வதந்தி பரவத் தொடங்கியது. இதற்கு விளக்கம் அளிக்கையில் ட்விட்டரில், “இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி, மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe