/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/435_5.jpg)
சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சீனு ராமசாமி, அவருக்கும் இளையராஜாவுக்கும் நடந்த கருத்து வேறுபாடுகளை சில நிகழ்வாக சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். சீனு ராமசாமியின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் சீனு ராமசாமி, அவரது பேச்சு வைரலானதை தொடர்ந்து தற்போது அதற்கு விளக்கமளித்து ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதை பயன்படுத்தி சிலர் அவரை சிறுமை செய்யத்துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது. ஜூன்24 வெளிவரும் மாமனிதன், அவரது புகழ் பாடும், அவர் மீதான என் அன்பை பேசும்" என குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானியிடம் எனது
அன்பை உணர்த்த
வழியறியாத
நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன்.
அதை பயன்படுத்தி
சிலர் அவரை சிறுமை செய்யத்துணிவது மேலும் வருத்தமளிக்கிறது,
அது என் நோக்கத்திற்கு எதிரானது.
ஜூன்24 வெளிவரும் #மாமனிதன்
அவரது புகழ் பாடும்
அவர் மீதான என்
அன்பை பேசும் ❤️ pic.twitter.com/bDtcnPfsn3
— R.Seenu Ramasamy (@seenuramasamy) June 21, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)