rhrhfdhdf

சென்ற 2016ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது 'தர்மதுரை' படம். இப்படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் வெளியான ‘எந்தப் பக்கம்...’ பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது. நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே. சுரேஷ் சமூகவலைதளத்தில் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் 'தர்மதுரை 2' பட அறிவிப்புக்கு விளக்கமளித்து இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

hfhfdnd

"தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.

Advertisment

வாழ்த்துக்கள்.

ஆனால்

அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள்

உண்மையல்ல.

ஆகவே அது சம்பந்தமான விசயத்தில்

எனக்கு எவ்வித சம்பந்தம்

இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.