Skip to main content

"ஒரு திரைப்படத்தையே முடக்கும் அபாயம் இச்சட்டத்தில் இருக்கிறது" - சீனு ராமசாமி எச்சரிக்கை!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
gdgdege

 

திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் (நேற்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவுசெய்யக் கடைசி நாளாகும்.

 

இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இயக்குநர் சீனு ராமசமி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "தணிக்கை செய்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை அரசியல் காரணங்களைக் கூறி மறுதணிக்கை செய்கிறோம் என்று அத்திரைப்படத்தையே முடக்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே #ஒளிப்பதிவுசட்டவரைவு மசோதாவில் 'மறுதணிக்கை' எனும் சரத்தை நீக்க வேண்டும் #cinematographact2021 #FreedomOfExpression" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்