ரிலீசிற்கு தயார் நிலையில் மூன்று படங்கள்... அடுத்த படத்தின் பணியைத் தொடங்கிய சீனு ராமசாமி!

seenu ramasamy

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'இடி முழக்கம்' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். இப்படம் தவிர்த்து, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமனிதன்', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களும் ரிலீசிற்குத் தயாராகிவருகின்றன. இவ்விரு படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களால் படங்களின் வெளியீட்டில் சிக்கல் நிலவிவந்தது. தற்போது அச்சிக்கல்களைத் தீர்த்து, மூன்று படங்களையும் அடுத்தடுத்து வெளியிட சம்மந்தப்பட்ட படக்குழுக்கள் முயற்சி எடுத்துவருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இடிமுழக்கம், மாமனிதன், இடம்பொருள்ஏவல் வெண்திரைக்கு வருவது உறுதி... என் பணி அதில் நிறைவானது. இனி விமர்சகர்கள், மக்கள் இருவருக்குமே அது பொதுவானது. 'அடுத்து என்ன' அதுதான் வாழ்வின் உயிர்ப்பான கேள்வி. அதற்கு தொடங்கியது இன்னொரு வேள்வி. உங்கள் அன்பை பெறுதலே தலையாய நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe