Skip to main content

விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து எம்.எஸ். பாஸ்கருக்கு பட்டம் கொடுத்த பிரபல இயக்குநர்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

M. S. Bhaskar

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி, பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு தற்போது ‘நடிப்புச் சித்தர்’ என்ற பட்டத்தை சீனு ராமசாமி வழங்கியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இறைவனுக்கு சித்தர்கள்போல நடிப்புத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த நடிப்புச் சித்தர் என்று அண்ணன் எம்.எஸ்.பாஸ்கரை கூறினால் அது மிகையாகாது. அவரது திறமை கண்டு அன்று தர்மதுரை படத்திலும், இன்று நான் இயக்கிய இடிமுழக்கம் படத்திலும் உணர்ந்து வியந்தேன். நினைத்த கணத்தில் கண்ணீர், கோபம், அன்பு, பாசாங்கு, கருணை, தயை, கழிவிரக்கம் போன்ற திறன்களை நொடிப்பொழுதில் நேர்த்தியாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர் இவர். இளைய தலைமுறையினர் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நல்ல முன்மாதிரி. மெத்தட் ஆக்டிங் மற்றும் இயல்பின் நடிப்பு இரண்டையும் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகர். அதுமட்டுமல்ல முழு காட்சி முடியும்வரை, ஏன் நாள் முழுக்க கேமரா இவர் பார்வை படும் தூரத்தில் இருப்பார். "பாஸ்கர் அண்ணன கூப்புடுங்க" என்பேன். "தம்பி நான் ரெடி என்பார்". அரை மணி நேரத்திற்கு முன்பே களத்திற்கு, அன்று வழங்கப்பட்ட உடையுடன் நிற்பார். மேக்கப் இல்லண்ணே என்பேன். கன்னத்தில் விரல் அழுத்தி "இல்லை தம்பி" என்பார். நடிகர் திலகத்தை தன் குருவாக நினைக்கும் சீடர். படப்பிடிப்பில் 16 செல்வங்களையும் அனைவரும் பெற வேண்டி அதை வரிசைப்படுத்தி பாடல் பாடி வாழ்த்தினார். நான் இந்த அர்ப்பணிப்பான பெரிய மனிதனின் ஆசிகளாக அதை மனதார ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு களத்தில் அவர் பகுதி நிறைவுநாளில்  அவருக்கு பிறந்தாள் வந்தது. கேக் வெட்டி வாழ்த்தினோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும், ஜி.வி. பிரகாஷிற்கு ‘வெற்றித்தமிழன்’ என்ற பட்டத்தையும் சீனு ராமசாமி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பார்க்கிங் மாதிரி கதை என நினைத்தேன்” - எம் எஸ் பாஸ்கர் 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ms bhaskar speech at akkaran movie press meet

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து முடிந்துள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். 

எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார். 

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.