Advertisment

"அப்பா அம்மா விரைவாக மீண்டு வர எங்கள் பிரார்த்தனைகள்" - நடிகைக்கு ஆறுதல் கூறிய சீனு ராமசாமி!

grss

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்துவரும் தமன்னா. தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டிலேயே இருக்கும் தமன்னா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தன் பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...“குடும்பத்திற்கே டெஸ்ட் எடுத்தோம், அதில் எனக்கு நெகட்டிவ் என்று வந்துவிட்டது. பெற்றோரைத் தவிர மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் என்று வந்துவிட்டது. அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு” கேட்டுக் கொண்டுள்ளார். தமன்னாவின் இந்தப் பதிவுக்கு திரைபிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"அன்பான தமன்னா

இந்த கடினமான சூழ்நிலையில், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்கள் பெற்றோருடன் நீங்கள் தைரியமாக நிற்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அப்பா அம்மா விரைவாக மீண்டு வர எங்கள் வாழ்த்துக்களும், பிரார்த்தனையும்" என கூறியுள்ளார்.

Advertisment

seenu ramasamy Tamanna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe