Advertisment

''எப்போதும் என்னிடம் அன்பு பாராட்டுபவர் அவர்'' -சீனு ராமசாமி 

bdgs

பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரான காமெடி நடிகர் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கரோனா மரணமான இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"தயாரிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் பேசத்தொடங்கிய நாள் முதலாக எளிமையான பாசமுள்ளத் தந்தையாக, பழகுவதற்கு இனியவராக நானறிவேன். எப்போதும் என்னிடம் அன்பு பாராட்டுபவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisment

seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe