Advertisment

"காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு" - சீனு ராமசாமி கண்டனம்

seenu ramasamy about pa ranjith assistant director issue

Advertisment

இந்து கடவுளை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி பாரத் இந்து முன்னணி எனும் அமைப்பின் நிர்வாகி ஒருவர் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” எனக் கடும் கண்டனத்தைத்தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, "பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம்" எனத்தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, "தம்பி விடுதலை சிகப்பியின் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுகிறேன். காயம்பட்ட பறவைகள் கதைக்க/ கவிபாட/ இசைக்க/ அட எழுதி கிறுக்க ஊர் உண்டு/ உறவுண்டு/ நிலமுண்டு/ நீண்டு வாழ வாழ்வுண்டு/ உரிமையுண்டு/ அடியேனும் அதற்கு துணையுண்டு.. இழிவு செய்யும் நோக்கமில்லை. இளைஞன் அவன் இன்னல் செய்யாதீர்.." எனத்தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

pa.ranjith seenu ramasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe