Published on 14/08/2020 | Edited on 14/08/2020

கரோனா அச்சுறுத்தாலால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வழியில் பயின்று வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புதிய கல்வி கொள்கை மற்றும் ஆன்லைன் கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
"பழமையின் நன்மையை
மறவேல்,
மரங்கள் புத்தகங்களுக்காக வெட்டப்படுகிறது என்றே
இணைய வழிக் கல்விக்கும்,
இ- புத்தகத்திற்கும்,
ஆன்லைன் கல்விக்கும் வந்தனை செய்து,
கல்விக்கூடம் செல்லும்பாதை பழைய வழியானால்
மனிதகுலத்திற்கு
விழிகள் போய் விடும்.
#onlineeducation #NewEducationPolicy2020'' என கூறியுள்ளார்.